NASA
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தேமுதிக வேட்பாளர் மனு தாக்கல்
புதுக்கோட்டை, மே, 18 : புதுக்கோட்டையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜாகீர் உசைன், தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி முத்துமாரியிடம் வழங்கினார். இவரது மனுவை 4 பேர் முன் மொழிந்தனர்.
ஜுன் 12ம் தேதி நடைபெற உள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மே 25ம் தேதி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். மே 26ம் தேதி வேட்பு மனு பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற 28ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

































